கேரட் விளைச்சல் அமோகம்.. விவசாயிகள் மகிழ்ச்சி..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் கிராம மக்களுக்கு விவசாயமே பிரதானமான தொழிலாக இருந்து வருகிறது.
பெரும்பாலும் பருவ நிலைக்கு ஏற்ப காய்கறிகள் ,பழவகைகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பீன்ஸ், அவரை பூண்டு ,ப்ளம்ஸ் உள்ளிட்டவை சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கேரட் விளைச்சல் அமோகமாக உள்ளது.
தற்போது பள்ளங்கி , அட்டுவம்பட்டி ,வில்பட்டி ,மன்னவனூர் ,பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேரட் பயிரிடப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு விவசாயத்திற்கு ஏற்ற நல்ல மழை பெய்து உள்ளதால் தற்போது பயிரிடப்பட்ட கேரட் விளைச்சல் நன்றாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரட் தற்போது கிலோவிற்கு ரூ50 முதல் ரூ 90 வரை விற்பதாகவும் இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளி ஊர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர் . தொடர்ந்து விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
-பவானி கார்த்திக்