“கட்சி தொடங்கியாச்சு.. வாகை சூடியாச்சு..” அடுத்தது..? தளபதி விஜய் கொடுத்த அப்டேட்..!!
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் தளபதி விஜய் தொடங்கி வைத்தார்.. கட்சி தொடங்கி ஓர் ஆண்டிற்குள் அக்கட்சியின் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் ரீதியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு.. சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்..
அதன் பின் டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாதத்திற்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கினார்.. கடந்த மாதம் கூட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் ரீதியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு.. சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்..
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி ஓர் ஆண்டுகள் ஆகிய நிலையில் நேற்று கட்சியின் பூவாக (வாகை) பூவை தவெக வெளியிட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் சினிமாவில் நடிப்பது சிரமம் என எனவே தளபதி 70வது என்னுடைய கடைசி படம் என விஜய் தெரிவித்திருந்தார்..
கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் விக்கிவாண்டி., மதுரை அல்லது திருச்சி. இந்த 3 மாவட்டத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் தனது மீட்டிங்கை தொடங்க போவதாக தகவல்கள் அக்கட்சி சார்பில் வெளியானது..
அதனை தொடர்ந்து மண்டலம் மாநாடுகள், தொகுதி மாநாடு என மக்களைச் சந்தித்து பேசுவது குறித்த திட்டங்களை. தீட்டி வருகிறார்.. இந்த நிலையில் நடிகர் விஜய் மாநில மாநாட்டை தொடங்குவதற்காக இடம் தருவதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர்கள், தற்போது தர மறுத்துவிட்டதாக கூறியுள்ளனர்.
எனவே விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே விஜய் மாநாடு நடத்த இருப்பதாகவும்,மாநாட்டிற்கான தேதி செப்டம்பர் மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் தவெக சார்பில் தெரிவித்துள்ளனர்..
இந்நிலையில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே விஜய்யின் கட்சிக் கொடி குறித்த தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது அதாவது செப்டம்பர் மாதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வெளியிடப்படும் எனவும், அதனை தவெக தலைவர் விஜய் வெளியிட இருப்பதாகவும் கூறுகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..