ஆசையாக மனைவிக்கு வாங்கி கொடுத்த பரோட்டா.. அதன்பின் நடந்த கொடூரம்..!
தென்காசி சொர்ண புரம் பகுதியில் வசித்து வருபவர் மஸ்தான். இரண்டு கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளியான இவர் பர்னிச்சர் கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மேலும் இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மஸ்தான் தன்னுடைய மனைவிக்கு பரோட்டா வாங்கி கொடுத்துள்ளார். அந்த பரோட்டா குருமாவில் தூக்க மாத்திரைகளை அதிக அளவில் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் சாப்பிட்ட உடன் பாத்திமா நன்றாக தூங்கிவிட்ட நிலையில் நள்ளிரவில் அவரின் கை கால்களை மஸ்தான் கட்டி சேலையால் தன்னுடைய மனைவியின் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் இன்று காலை கிராம நிர்வாக அதிகாரியிடம் தனது மனைவியை கொலை செய்ததாக கூறி மஸ்தான் சரண் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த பாத்திமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மஸ்தானை பிடித்து திவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாத்திமாவின் நடத்தையில் நீண்ட நாட்களாக மஸ்தான் சந்தேகப்பட்டு வந்ததாகவும் வேறு யாருடனும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் இதன் காரணமாக தான் பாத்திமாவை கொலை செய்தது தெரியவந்தது.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் மஸ்தானை கைது செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்