சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோவின் கீழ் கைது..!!
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே பூப்பறிக்கும் வேலைக்குச் சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வெளியில் சொன்னால். சிறுமியை பற்றி தவறாக பலரிடம் கூறி அசிங்கப்படுத்தி விடுவதாக சிறுமிக்கு மிரட்டல் விடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது. சிறுமி கர்ப்பமானதால் அம்பலம்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (60). விவசாயக் கூலி தொழிலாளியாக இருக்கும் இவர், அருகே உள்ள தோட்டத்தில் பூப்பறிக்கும் வேலைக்கு வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்து விட்டு இதுபற்றி வெளியில் சொன்னால்.., உன்னை பற்றி தவறாக பலரிடம் கூறி அசிங்கப்படுத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
நாளடைவில் சிறுமிக்கு உடல்நிலை மாற்றம் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற போது, அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியிடம், அவரது பெற்றோர்கள் கேட்டபோது, அவரை காந்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் பலரிடம் கூறி அசிங்கப்படுத்தி விடுவதாகவும் மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி, காந்தி மீது வழக்குப்பதிவு, செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..