காணாமல் போன 6௦ வருட உழைப்பு..!! 7௦ வயது முதியவர் நெகிழ்ச்சி..!!
சென்னையில் கடந்த சில நாட்களாக குப்பைக்கு வரும் தங்கம் மற்றும் விலையுர்ந்த பொருட்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகிறோம்., அந்த தூய்மை பணியாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்… அதேபோல் சென்னையில் மற்றோரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையில் முதியவர் தவறவிட்ட கை பையை முதியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணி மேற்பார்வையாளர். காணாமல் போன பை தொலைந்து இருந்தால் என்னுடைய 60 வருட உழைப்பு செல்போனில் இருப்பதாக கூறி மேற்பார்வையாளர்க்கு நன்றியை தெரிவித்த முதியவர்.
சென்னை திருவான்மியூர் பெசன்ட் நகர் செல்லும் பிரதான சாலை கலாஷேத்ரா சாலை வழியாக 78 வயதான ரமணி எனடிரா முதியவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும் முதியவர் ரமணி எடுத்து வந்த கை பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வெகு நேரம் பல இடங்களில் தேடியும் முதியவரின் கை பை கிடைக்காத நிலையில் திடீரென காணாமல் போன செல்போனில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் நான் சென்னை மாநகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர் விஜய்(25) என்று கூறி இந்த செல்போன் மற்றும் கை பை சாலையில் கிடந்தது என்று கூறியுள்ளார்.
உடனே அந்த முதியவர் அந்த கை பை மற்றும் செல்போன் உள்ளிட்டவை என்னுடையது. இன்று இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கவனக்குறைவால் தவரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார். பின்னர் கலாஷேத்ரா அருகில் காணாமல் போன கை பையுடன் காத்திருக்கும் இடத்தை கூறியதும் அங்கு சென்று முதியவர் ரமணி அவர் தவறவிட்ட கை பையை தூய்மை பணி மேற்பார்வையாளர் விஜய் மற்றும் பகுதி மேற்பார்வையாளரளர் செல்வம் ஆகிய இருவரும் அவரிடம் ஒப்படைத்தனர்.
அப்பொழுது தவறவிட்ட கை பையில் இருந்த அனைத்தும் சரியாக உள்ளதா என்று சோதனை செய்த முதியவர் அதில் இருந்த இரண்டு செல்போன், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகள் அப்படியே இருந்துள்ளது. மேலும் தனக்கு 78 வயதாவதகவும், என்னுடைய 60 வருட உழைப்பு இந்த செல்போனில் தான் உள்ளது என்றும் இதனை கண்டுபிடித்து அவரிடம் ஓப்படைத்த இருவருக்கும் நன்றியை தெரிவித்தார்.