வயநாட்டிற்கு வரவுள்ள அடுத்த ஆபத்து..! அமைச்சர் வீணா ஜார்ஜ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. !
வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 385-ஆக அதிகரித்துள்ளது. வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 7-வது நாளாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம், தன்னார்வலர்கள் உள்பட 1500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
300க்கும் மேற்பட்டோரின் உயிழப்புக்கு காரணமான வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோரை இந்திய ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர். இந்நிலையில் வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
மீட்புக் குழுவினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர், Doxy prophylaxis தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும், அந்த பகுதியில் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தொற்று நோய் பாதிப்பு உள்ளவர்கள் முகாம்களில் சிறப்பு அறைகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
300க்கும் மேற்பட்டோரின் உயிழப்புக்கு காரணமான வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோரை இந்திய ராணுவத்தினர் உயிருடன் மீட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..