அடுத்த கவுண்ட் டவுன் ஸ்டார்ட்..! 7 செயற்கைகோள்களுடன் விண்ணிற்கு செல்ல இருக்கும் பி.எஸ்.எல்.வி.சி-56 ராக்கெட்..!!
7 செயற்கைகோள் களுடன் பி.எஸ்.எல்.வி.சி-56 ராக்கெட் நாளை விண்ணில் ஏவ உள்ளது. அதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநிலமான ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-56 மற்றும் ஜி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் விண்ணில் செல்ல உள்ளது.
எனவே அதற்காக நாளை காலை 6:30 மணிக்கு முதலாவது ஏவு தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-56 ராக்கெட் விண்ணில் செல்ல உள்ளது. அந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5டிகிரி சாய்வில் 535கிமீ உயரத்திற்கு பூமத்திய ரேகை சுற்று பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த செயற்கை கோளுடன் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த “டிஎஸ்-சாட்” என்ற செயற்கை கோள் 360 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த டிஎஸ் என்ற செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ மற்றும் எஸ்.டி., இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.
இந்த செயற்கை கோளுடன் 6 செயற்கை கோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணிற்கு அனுப்ப பட உள்ளது. 23 கிலோ எடை கொண்ட “விகிலேக்ஸ் – ஏஎம்” என்ற தொழில் நுட்ப விளக்க மைக்ரோ செயற்கை கோள், ஆர்கேட் என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கை கோள், “எக்ஸ்ப்ளோரர்” எனும் ஒரு சோதனை செயற்கைகோள்.
‘ஸ்கூப்-2’ என்ற 3யு நானோ செயற்கை கோள் மற்றும் கலாசியா -2 என்ற 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி 12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள்கள் உட்பட 6 செயற்கை கோள்கள் ஏவப்படுகிறது.
இந்த ‘டிஎஸ்- சாட்’ என்ற செயற்கைக்கோள் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. இந்த ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் நாளை விண்ணில் செல்ல உள்ள நிலையில், அதற்கான 25. 30 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 5 மணிக்கு தொடங்கி உள்ளது.