விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முத்துக்குமார் பேட்டி..!!
வேலூரில் பாரம்பரிய நெல் திருவிழா குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விவசாயிகள் மண்காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூரில் மண்காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் இஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா திருச்சியில் வரும் 30 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இதில் தமிழகத்திலிருந்து ஆயிரம் விவசாயிகள் பங்கேற்கவுள்ளனர் இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா தெலுங்கானாவை சேர்ந்த வேளாண் வல்லுநர்கள் குழு விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பெற்ற பொருளாக மாற்றி விற்பனை செய்வது விவசாயிகளே கண்டுபிடித்த விளை குறைவான கருவிகள் அறிமுகம்.
பாரம்பரிய நெல்கள் 200 வகையான நெல்கள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்குதல் மேலும் பாரம்பரிய விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பெற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வகைகள் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அங்கு கலந்துகொள்ளும் ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைகளை இலவசமாக வழங்கியுள்ளனர்.
மாநிலத்தில் பாரம்பரிய நெல்லை பயிரிட ஏற்பாடும் செய்யும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது இதில் விவசாயிகள் கலந்துகொண்டு இயற்கை உரம் பாரம்பரிய நெல் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் இந்த கண்காட்சி நடக்கிறது இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென கூறினார்
Discussion about this post