திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் சேவைகள் ரத்து..!!
ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை 30 நாட்களுக்கு ஏழுமலையான் கோவிலின் அருகே உள்ள புஷ்கரணி திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே பக்தர்கள் குளத்தில் இறங்கி புனித நீராட தடை.
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவில் திருக்குளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அடுத்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியதும் குளத்தில் இருக்கும் தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு பராமரிப்பு பணிகள் செய்து, அதன் பின் குளத்தில் தண்ணீரை நிரப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை குளத்தில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். அதை தொடர்ந்து குளத்தை பராமரிப்பு செய்யும் பணியும் மற்றும் மராமத்து ஆகிய பணிகளும் நடைபெறும்.
ஆகஸ்ட் மாதம் இறுதியில் வேலைகள் முடிந்த பின் குளத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பப்படும். எனவே குளத்தில் தண்ணீர் நிரப்பும் காரணமாக குளத்தில் தினமும் நடத்தப்படும் புஷ்கரணி ஆரத்தி, ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மிக தகவல்கள், பரிகாரங்கள், மற்றும் ஆலய தரிசனங்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திங்கள்..
Discussion about this post