மகனை கொல்ல முயன்ற தாய்..! காவல்நிலையத்தில் சிறுவன் அளித்த பகீர் பதிவு..!
திருவள்ளூர் அடுத்த திருத்தணி அருகே உள்ள ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா (வயது 34). டிவி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மோகன் முரளி கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் தனது 3 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், பூர்ணிமாவின் மகன் விக்னேஷ் திருத்தணி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகாரில், குறிப்பிட்டிருப்பதாவது, “தாய் பூர்ணிமாவை பார்க்க ஸ்ரீதர் என்ற ஆண் நண்பர் ஏன் இங்கு அடிக்கடி வருகிறார்..? என பூர்ணிமாவின் மகன் விக்னேஷ் கேட்டுள்ளார். அவர் எந்த நேரத்திலும் வருவார் என்றும் நீ அதையெல்லாம் கேட்கக்கூடாது என்று திட்டி விக்னேஷ் கன்னத்தில் பூர்ணிமா அடித்துள்ளார்.
நான் ஸ்ரீதரை வீட்டை விட்டு வெளியேபோ என்று கூறியதும்.., எனது அக்கா என்னை அறையில் அடைத்து, எனது கை, கால்களை கட்டினார். எனது தாய் கம்பியினை சுடவைத்து உடம்பெங்கிலும் சூடுவைத்தார். மேலும் ஸ்ரீதரிடம் என்னை கொலை செய்யுமாறும், என்னிடம் இருக்கும் 4 லட்சம் பணத்தை வைத்து ஜாமீனில் எடுத்து விடுகிறேன் என்று கூறினார்.
எனது தந்தை விபத்தில் இறந்ததற்கு இழப்பீடாக எனது பெயரில் 4 இலட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. சிறிது நேரம் கழித்து என் கை கால்களை அவிழ்த்துவிட்டு இதோடு தொலைந்து போ என்று என்னை வீட்டைவிட்டு வெளியேபோ என விரட்டினார்கள் மீறி வந்தால் இந்த இடத்திலேயே உன்னை கொன்று விடுவோம் என்று எனது தாயாரும், ஸ்ரீதரும் கொலைமிரட்டல் விடுத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து நமது மதிமுகம் ரிப்போட்டரை சந்தித்து விக்னேஷ் கூறியதாவது., என்னை கொலை செய்ய முயன்ற தாய் பூர்ணிமா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை தொடர்ந்து விக்னேஷின் தாத்தா ஆறுமுகம்., “நான் முன்னாள் ராணுவ வீரர்., எனது மகன் மோகன் முரளி இறந்த பிறகு நாங்கள் இருந்த அந்த வீட்டில் மருமகள் பூர்ணிமா இருக்கட்டும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால், அவர் கள்ளக்காதலுடன் இணைந்து எனது 50 லட்சம் ரூபாய் வீட்டையும் அபகரித்துக் கொண்டார். தற்போது எனது பேரனையும் கொலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். நாங்கள் வயதானவர்கள் எங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.
இது தொடர்பாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக காவல்துறை தலைவர் எங்களை காப்பாற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
– லோகேஸ்வரி.வெ