அரியர் முடிக்க சொல்லி கண்டித்த தாய்…. ஆத்திரத்தில் தாய் மற்றும் தம்பியை கொலை செய்த வாலிபன்…!
சென்னை திருவொற்றியூர் திருநகர் 1 வது தெருவைச் சேர்ந்தவர் அக்குபஞ்சர் மருத்துவரான பத்மா. இவரது கணவர் முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு நித்தேஷ் (20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். நிதிஷ் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இரண்டாவது மகன் சஞ்சய் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், பத்மாவின் மூத்த மகன் நித்தேஷ் தனது தாய் பத்மா மற்றும் தம்பி சஞ்சய் ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் அவர்கள் இருவரின் சடலத்தையும் கோனி பையில் கட்டி வைத்து விட்டு, உறவினர்களுக்கு போன் மூலம் மெசேஜ் செய்து தகவல் அனுப்பினார்.
அவர் உறவினர்களுக்கு அனுப்பிய மெசேஜ்ஜில் தாய், தம்பியை கொலை செய்ததாகவும், தன்னை தேட வேண்டாம் தானும் தற்கொலை செய்ய போவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்த திருவொற்றியூர் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற நித்தேஷ் தேடி வந்தனர். பின்னர் திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்திருந்த நிதிஷை காவல் துறையினர் கைது செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் கல்லூரி படிப்பில் 14 அரியர் இருந்ததை முடிக்க சொல்லி கண்டித்ததால் தாய் மற்றும் தம்பியை கொலை செய்ததாக நித்திஷ் கூறியுள்ளார்.
-பவானி கார்த்திக்