கட்டு கட்டாக பிடிபடும் பணம்..!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கயம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கேரள மாநிலத்தை சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் 48 லட்சம் ரூபாயை ஆவணங்கள் எதுவும் இல்லாமல் எடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் கேட்ட போது, நிலத்தை விற்பனை செய்து அந்த பணத்தைக் கொண்டு செல்வதாக கூறினார். இருப்பினும் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் 48 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சி ஆணையார் பவன்குமாரிடம் ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் புதுச்சேரியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கொண்டு சென்ற 1 லட்சத்து 33 ஆயிரத்து 600ரூபாயை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றதால் அவற்றை பறிமுதல் செய்து சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். அதில் 1200 டாலர் யூரோ கரன்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அதைபோல் திருப்பூர் அவினாசியை சேர்ந்த நகை கடை ஊழியர் கலையரசன் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற 2லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தையும், 5 தங்க நாணயங்களையும் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் மாநகராட்சி ஆனையாரும் தேர்தல் அலுவலருமான பவன்குமாரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆந்திரமாநிலம் சித்தூரை சேர்ந்த கரன்குமார் என்பரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் சோளிங்கரில் தான் இரண்டு வீட்டுமனை வாங்கி உள்ளதாகவும் அதற்கான பத்திரப்பதிவிற்காக பணம் கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.