ஓடும் பேருந்தில் இளைஞர் செய்த கேவலம்… தர்ம அடி கொடுத்து சிறையில் அடைப்பு..!
சென்னையை அடுத்த நுங்கம்பாக்கத்தில் இருந்து மாநகர பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை புரசைவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவரிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து பேருந்து கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வரும் போது திடீரென கத்திக் கூச்சலிட்ட மாணவி இளைஞரை பளார் என்று அடித்தார். என்ன என்பதை கேட்டறிந்த மற்ற பயணிகள் அந்த இளைஞர்க்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர், பயணிகள் பேருந்தை நிறுத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராமு என்பதும், ஓட்டேரியில் நண்பருடன் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த இளைஞர் நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
-பவானி கார்த்திக்