இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஐ.சி.எம்.ஆர் ஆய்வு அறிக்கைகளின் படி, 1990ல் மாரடைப்பால் இறப்போர் 15.2%ஆக இருந்த நிலையில் 2023ல் 28.1 சதவீதம் ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
2017-18ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8 சதவீதம் பேருக்கும், மதுப் பழக்கம் உள்ளவர்களில் 15.9 சதவீதம் பேருக்கும், போதிய உடல் உழைப்பு இல்லாத 41.3 சதவீதம் பேருக்கும், போதுமான காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாத 98.4 சதவீதம் பேருக்கும் இருதய நோய் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.