நர்சிங் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோவின் கீழ் கைது..! அரியலூரில் பரபரப்பு..!!
அரியலூர் ஆண்டிமடம் அருகே நர்சிங் மாணவியான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியே சொன்னால் தாய் தந்தையரை கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டியு மூன்று குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது .
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சவுரவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் குமரேசன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் கல்லூரியில் படித்து வரும் மாணவியை கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சிறுமியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில், அத்துமீறி வீட்டில் நுழைந்து தனியாக இருந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதை வெளியே சொன்னால் உனது தாய் தந்தையரை கொன்று விடுவதாக சிறுமியை மிரட்டியுள்ளார். பின் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, மருத்துவமனையில் டாக்டர்களிடம் காண்பித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். பின் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து குமரேசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..