எமனாக வந்த லாரி.. அண்ணன் கண் முன்னே தங்கைக்கு நேர்ந்த சோகம்..
சென்னை அம்பேத்கர் நகரை சேர்ந்த குப்பன் என்பவரின் மகள் ஹேமமாலினி (24). இவர் எம்.காம் முடித்த இவர் ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய அண்ணன் வெங்கடேசனுடன் (28) திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார்.
பின்னர் திருமணம் முடிந்த பிறகு அண்ணா நகரில் வேலை பார்க்கும் தன்னுடைய தாயை பார்ப்பதற்காக இருவரும் நூறடி சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்தது. இதில் பைக் ஏறி இறங்கிய நிலையில் திடீரென நிலை தடுமாறிய அண்ணன் தங்கை இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் வெங்கடேசன் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் ஹேமமாலினி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி அவரின் வயிற்றின் மீது ஏறி இறங்கியது. அதோடு அவரை சிறிது தூரம் வரை இழுத்து சென்றது.
இந்த கோர விபத்தில் ஹேமமாலினி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை கண்ட வெங்கடேசன் தன் கண்முன்னே தங்கை துடிதுடித்து பலியானதை பார்த்து கதறி துடித்தார்.
தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹேமமாலினியில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”