முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த லிஸ்ட்..! அதிரடி ஆக்ஷ்னில் இறங்கிய கமிஷனர் அருண்..!!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாக பல புகார்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் அதனை முற்றிலுமாக ஒழிக்க சென்னை கமிஷனர் அருண் அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளார்..
கமிஷனர் அருண் சென்னையில் ரவுடிசத்தை முற்றிலுமாக ஒழிப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.. இதுகுறித்து கமிஷனர் அருண் கூறியதாவது முதலில் நான் ரவுடிகளுக்கு புரிகின்ற பாஷையில் பேசுவேன், அதை அவர்கள் கேட்டு திருந்தவில்லை என்றால் போலிஸ் கடமை என்னவோ நான் அதை செய்வேன் எனக்கூறினார்.
கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் பிரபல ரவுடிகளான பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
அதில் திருவேங்கடம் என்ற ரவுடி துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்ட இடத்தை காண்பிக்க சென்ற போது காவலர்களை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது கடந்த ஜூலை மாதம் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுடப்பட்டார்., இந்த சம்பவம் பல ரவுடிகளிடையே பீதியை ஏற்படுத்தியது..
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ரவுடி சம்பவ செந்தில், மற்றும் காக்காதோப்பு பாலாஜி சீசிங் ராஜா ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில்., அவர்களை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது கடந்த செப்டம்பர் 18ம் தேதி அதிகொலை தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டார்..
இந்த சம்பவம் சென்னையின் மற்ற ரவுடிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.. காக்கா தோப்பு பாலாஜி மீது 6 கொலை மற்றும் 17 கொலை முயற்சி உட்பட 59 வழக்குகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடதக்கது. கடந்த 3 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜி அரசியல் பிரமுகர் ஒருவரை கொலை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்..
இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை பிடிபதற்காக சென்ற போது., பாலாஜி தான் வைத்திருந்த துப்பாகியால் காவலர்களை சுட முயன்ற போது அந்த குண்டு காவலர்களின் வாகனம் மீது பட்டது., அப்போது காவலர்கள் பாலாஜியை சரண் அடையும் படி கேட்டுள்ளனர்., ஆனால் பாலாஜி கத்தியால் உதவி ஆய்வாளர்கள் கையை வெட்டி தப்பி செல்ல முயன்றுள்ளார் .. அப்போது பாலாஜியை காவலர்கள் என்கவுண்டரில் சுட்டுள்ளனர்..
மேலும் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜாவை நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரையும் கமிஷனர் அருண் என்கவுண்டர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவிலின் பிரபல ரவுடியான ஆல்வின் நேற்று முன்தினம் காவலர்களால் சுட்டு பிடிக்கப்பட்டார்., அதில் அவருக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்கு., கட்டப்பஞ்சாயத்து., போதை பொருள் கடத்தல்., உட்பட 13 வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது..
அதிரடி ஆக்சனில் இறங்கிய அருண் :
சென்னையின் புதிய கமிஷனராக அருண் பதவியேற்றதில் இருந்தே ரவுடிசத்தை ஒழிப்பதற்கான அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவர் சொன்ன படியே ரவுடிசத்தை ஒழிப்பதற்காக அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ளார்.
ரவுடிகளை கண்காணிக்க ஆணையர் உத்தரவின் படி பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் ரவுடிகளை அப்போதே கைது செய்ய காவலர்கள் தினமும் இருமுறை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் ஆங்கங்கே வாகன தனிகையிலும் நடமாடும் போலிசாக ரவுடிகளை கண்காணிக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அருண் பிற காவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல் இந்த பணியில் ரவுடிகளுக்கு அதரவாக செயல்படும் காவலர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என ஆணையர் அருண் இவ்வாறே உத்தரவிட்டுள்ளார்..
முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த லிஸ்ட் :
அதனை தொடர்ந்து சில உத்தரவுகளையும் கமிஷ்னர் அருண் பிறப்பித்துள்ளார்., அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது “பல்வேறு வழக்குகளில் அடிகடி கைது செய்யபடும் ரவுடிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்த வேண்டும்..
குறிப்பாக கட்டப்பஞ்சாயத்து., கொலை மிரட்டல்., போன்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளின் பெயர் லிஸ்ட் எடுக்கப்பட்டு அந்த ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டாமல் போனதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம்., அதிலும் லஞ்சம் வாங்கி கொண்டு ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களின் பெயரை முதலமைச்சர் ஸ்டாலின் டிக் அடித்து ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளார்..
கடந்த சில மாதங்களில் மட்டும் 5 பிரபல ரவுடிகள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ரவுடிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..