“கால் வெட்ட வேண்டும்”… சியான் விக்ரமின் உருக்கமான பதிவு..!
விக்ரம்:
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் ஒருவர் விக்ரம். பின்னனிபாடகர், தயாரிப்பாளார் ஆவார். மேலும் இவர் நடித்த அனைத்து படங்களிலும் அவருடைய காதபாத்திரத்துக்கு தானே குரல் குடுக்கும் பெருமைக்குரிய நடிகர்.
இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த சேது, சாமி, பிதாமகன் ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனைதொடர்ந்து இவர் விக்ரம் என்னும் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கலான:
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். கோலார் தங்க சுரங்கத்தில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக வேண்டியதை தொடர்ந்து, சில பிரச்சனைகளின் காரணமாக, தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்தநிலையில் , வரும் ஆகஸ்டு 15-ஆம் தேதி அன்று, இப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இசை வெளியீட்டு விழா:
இந்தநிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் விக்ரம் படத்தை பற்றிய பல சுவாரிஸ்யமான தகவல்களை கூறிக்கொண்டிருக்கும் போது அவரது வாழ்க்கையில் சந்தித்த சோகமான விஷயங்களை பற்றி பேசி இருந்தார்.
விக்ரம் கூறியதாவது :
“நான் இப்போது இருப்பது போல தான் சிறு வயதிலும் இருந்தேன். படிக்கவே மாட்டேன். நான் 8ம் வகுப்பு படிக்கும்வரை ஸ்கூலில் முதல் மூன்று ரேங்க் தான் எடுப்பேன். ஆனால் நடிக்க ஆசை வந்து அதில் சென்றபிறகு கடைசி 3 ரேங்க்களில் ஒன்றை தான் வாங்குவேன்.”
“அந்த அளவுக்கு சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆசை உச்சத்தில் இருந்தது. மேலும் நாடகம் நடிக்கும்போது பல விதமான ரோல்களை கேட்டு வாங்கி நடிப்பேன்.
முதல் விருது :
காலேஜ் படிக்கும்போது நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் ஐஐடியில் ஒரு நாடகத்தில் நடித்து சிறந்த நடிகர் விருது வாங்கினேன். அன்று விபத்தில் சிக்கி என் கால் உடைந்துவிட்டது.
கால்களை வெட்டி எடுக்க வேண்டும்:
அந்த விபத்தில் கால் வெட்ட வேண்டும் என கூறினார்கள். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். 23 சர்ஜரி நடந்தது. அதன் பிறகு ஒரு வருடம் crutches பிடித்துக்கொண்டு தான் நடந்தேன்.
இனி நடக்கவே முடியாது, வெட்ட வேண்டும் என கூறிய காலை காப்பாற்றியதே பெரிய விஷயம் என மருத்துவர்கள் கூறினார். என் அம்மா அழுதுகொண்டு இருந்தார். ஆனால் நான் நடப்பேன் என நம்பிக்கையுடன் இருந்தேன்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என கிறுக்கன் போல இருந்தேன். பெரிய ரோல் வேண்டாம், ஒரே ஒரு சீனில் வந்தால் கூட போதும் என வெறியுடன் எனக்கான வாய்ப்பை தேடி அலைந்தேன்.
அந்த போராட்டம் இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்தது. அந்த நேரத்தில் நான் வேலைக்கும் போவேன். ஒரு குச்சியை பிடித்துக்கொண்டு 750 ரூபாய் மாத சம்பளத்திற்கு சென்று வருவேன்.
விமர்சனம்:
என்னை சுற்றி இருந்தவர்கள் மற்றும் எனது நண்பர்கள் என் அனைவரும் நடிக்க வாய்ப்பு எல்லாம் கிடைக்காது விட்டுவிடு என்று விமர்சித்தார்கள்.
என் நண்பர்கள் உயர்ந்து கொண்டிருந்தார்கள். வளராமல் ஒரே இடத்தில் இருந்த என்னை பரிதாபமாக பார்ப்பார்கள். ஆனாலும் நான் என் நம்பிக்கையில் உறுதியாக இருந்தேன். அன்று நான் விட்டிருந்தால் இப்போது இந்த நிலையில் இருக்க முடியாது.
நான் இப்போதும் நினைப்பேன். வெற்றி எனக்கு வரவே இல்லை என்றால் என்னை செய்திருப்பேன் என யோசிப்பேன். இப்போதும் சினிமாவில் நடிக்க நான் முயற்சி செய்து கொண்டு தான் இருந்திருப்பேன். அந்த அளவுக்கு நான் சினிமாவை நேசிக்கிறேன். என்று கூறியிருந்தார். இ்ந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்