தனிமையில் ஆபாச படம் பார்ப்பது குற்றமில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2016ல் கேரளா, ஆலுவா பேலஸ் பகுதியில் 33 வயது நபர் ஒருவர் சாலையோரம் தனியாக அமர்ந்து ஆபாச வீடியோக்களை தனது மொபைலில் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவர் மீதான விசாரணை நடைப்பெற்று வந்தன.
இந்நிலையில் அவர் மீதான வழக்கு மீண்டும் கேரள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த பி.வி.குன்ஹி கிருஷ்ணன், ஒருவர் ஆபாச வீடியோவை தனிப்பட்ட முறையில் பார்த்துவிட்டு அதை வேறு யாருக்கும் அனுப்பமலோ அல்லது காட்டமலோ இருந்தால் அது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படாது, இது அவரின் தனிப்பட்ட விருப்பம்.
யாருடைய தனியுரிமையிலும் நீதிமன்றம் தலையிட முடியாது. குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட், கால்பந்து அல்லது அவர்கள் விரும்பும் பிற விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும். மைனர் குழந்தைகளிடம் மொபைல் போன்களை கொடுப்பதில் உள்ள ஆபத்துகளையும் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்து வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதையும் படிக்க: இளம் தலைமுறையினரின் தொடர் விபரீத முடிவு… உயிர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்… ராஜஸ்தானில் நடக்கும் தொடர் அவலம்..!
Discussion about this post