செந்தில் பாலாஜி வழக்கை விசாரணை செய்த நீதிபதி பணி மாற்றம்..!! வழக்கின் புதிய நீதிபதி..?
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்… கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தது.
எனவே செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜாமீன் மனு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடந்த இந்த வழக்கின் பட்டியலை வெளியிட்டது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் ஆஜராகியிருந்ததால், செந்தில் பாலாஜி வழக்கில் அவர் ஆஜராகவில்லை.
எனவே நீதிபதி ஓகா, அந்த வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமலே ஒத்திவைத்தார். ஆனால், அந்த வழக்கில் சில விளக்கங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது. போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த 3 வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப்போகிறதா..? அல்லது 1000-க்கும் மேற்பட்டோர் குற்றம்சாட்டப்பட்ட வழக்கை தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை மட்டும் விசாரிக்கப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது..
அமலாக்கதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதற்கான வாதங்களை முன் வைத்தார்.. நீண்ட நேர ஒத்திவைப்பிற்கு பின் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆஜராகி, நீதிபதி எழுப்பிய கேள்விக்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகஸ்ட் 20-ஆம் தேதி விளக்கம் அளிப்பார் என இதற்கு முன் தெரிவித்த நிலையில் அந்த வழக்கை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்பின் இந்த வழக்கானது கடந்த செப்டம்பர் மாதம் 3ம் தேதி விசாரணைக்கு வந்தது.., அப்போது இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்ககோரி மனு அளிக்கப்பட்டது ஆனால் அந்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 58வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் 58 முறையாக இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை செய்து வரும் நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி “எஸ் அல்லி” சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 3ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டது., அப்போது சிறையில் இருந்தபடியே செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின் இந்த வழக்கை செப்டம்பர் 6ம் தேதி வரை காவலை நீட்டிக்க உத்தரவிட்டார்..
அதேசமயம் செந்தில் பாலாஜியின் வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. இதற்கிடையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இதனால் வரும் நாட்களில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளை நீதிபதி அல்லி விசாரிக்க மாட்டார். அவருக்கு பதில் நீதிபதி கார்த்திகேயன் தான் விசாரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை வழக்கு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..