ரேடியோ ஒலியை குறைக்க சொன்ன காவலாளி.. ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் செய்த சம்பவம்..!
கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்த தம்பிராஜ் (61) என்பவர் சென்னையில், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வரும் இவர் திருவல்லிக்கேணி, தசூதின்கான் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் (மேன்ஷன்) தங்கி வந்தார்.
இதேபோல, சிவகாசியை சேர்ந்த அய்யனார் (60) என்பவரும் அதே மேன்ஷனில் தங்கி சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.
இந்தநிலையில், அய்யனார், இரவு நேரத்தில் தனது அறையில் சத்தமாகப் ரேடியோவில் பாட்டு வைத்து கேட்டுக் கொண்டு இருந்தார். இது தம்பிராஜுக்கு இடையூறாக இருந்ததால், அய்யனாரிடம் சென்று ரேடியோ ஒலியைக் குறைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அய்யனார் குறைக்காமல் இருந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு கைகலப்பாக மாறியது. தகராறு முற்றியதால் அய்யனார் ஆத்திரத்தில் அருகில் இருந்த கட்டை கொண்டு தம்பிராஜை பலமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த தம்பிராஜ் அந்த விடுதியில் இருந்த மற்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி தம்பிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்