மானை சுடச் சென்றவர் இறந்துபோய் வீட்டிற்கு திரும்பிய சோகம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா தென்மலை அத்திப்பட்டுகிராமத்தைச் சேர்ந்த இளைஞர் வேட்டைக்குச் சென்று துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வனப்பகுதியில் மானை துப்பாக்கியால் சுட முயன்றபோது வேட்டைக்குச் சென்ற சக்திவேல் என்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் பிரகாஷ் என்ற இளைஞர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மான் வேட்டைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் உடன் சென்ற இரண்டு நபர்களை செங்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர் .
மேலும் தலைமறைவாகி உள்ள ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேட்டைக்குச் சென்று இளைஞர்களில் ஒருவர் துப்பாக்கிக் கொண்டு பாய்ந்து இருந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post