கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்த சம்பவம்…!! பலியான கல்லூரி மாணவர்..!!
மயிலாடுதுறை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 7 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ஹரி ரோகித். வைத்தீஸ்வரன்கோவில் வேலவன் நகரில் உள்ள நண்பர் ராகுல் வீட்டிற்கு 8 நண்பர்களுடன் சென்றார்.8 பேரும் தரங்கம்பாடி சுற்றுலா தளத்திற்கு சென்று விட்டு வைத்தீஸ்வரன்கோவிலுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பூந்தாழை நான்கு வழி சாலையில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் ஹரி ரோஹித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருகில் இருந்த மக்கள் கவிழ்ந்த காரை புரட்டி காயங்களுடன் சிக்கி இருந்த 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த செம்பனார் கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..