போதைப்பொருட்கள் பறிமுதல்..!! காவல்துறையினர் அதிரடி..!!
திருப்பத்தூர் அருகே வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த போதை பொருட்களை காவல்துரையினர் பறிமுதல் செய்தனர்.
போதைபொருள் புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது., போதைபொருள் புழக்கம் மட்டுமின்றி அதனை கடத்தி விற்பனை செய்யும் நபர்களை பிடிபதற்காகவும் அரசு முயற்சித்து வருகிறது.. அதற்காக ஆங்காங்கே காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக நகர காவல்துரையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மணிகண்டன் வீட்டிற்க்கு சென்ற காவல்துறையினர் அவரிடம் இருந்து 135 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகிய போதை பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்..
மேலும் போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தத்தற்காக மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..