“சிங்கத்தை சீண்டிபார்க்கும் வேட்டையன்..” கொந்தளிக்கும் ரசிகர்கள்…
கங்குவா:
சூர்யா நடிப்பில் பல கோடி மதிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை கமர்ஷியல் இயக்குநாரன சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
சூர்யாவின் 42வது படமான கங்குவா வரலாற்று கதையாம்சங்களை கொண்ட கதைகளமாக உருவாகி உள்ளது. மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து.
மேலும் இந்த படத்தின் ப்ரோமஷன் பணிகள் அனைத்து முடிவடைந்துள்ளது. 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கங்குவா ரிலீஸ் தேதி:
இந்த சூழலில் கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10 தேதி திரையரங்குகளில் வெளியாகும் என் படகுழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் அளவு கடந்த உற்சாகத்தில் இருந்த நிலையில் படத்தில் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்டையன் – கங்குவா:
கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அன்று தான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படமும் ரிலீசாக உள்ளதாக அறிவித்தனர்.
ஞானவேல்ராஜா பேட்டி:
அதாவது, கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அந்த பேட்டியில், “நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது பிறந்த நாள் அன்று, கோவிலுக்கு சென்று, அர்ச்சனை செய்வேன். எனவே, அவரது திரைப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்தால், நான் கங்குவா படத்தை வெளியிட மாட்டேன்” என்று கூறியிருந்தார்.
இந்த பேட்டியை வைத்து பார்க்கும்போது, கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி, மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் மனதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்