மண்டல அளவில் நடந்த ஹாக்கி போட்டி.. நெல்லை அணி சாம்பியன்..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 17 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான 3 நாள்கள் நடைபெறும் தென் மண்டல ஹாக்கிப் போட்டி நடைபெற்றது.
இதில் சிவகங்கை ,நெல்லை ,தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 6 பள்ளி அணிகள் கலந்து கொண்டன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக், அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி ,கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மோதின.
இதில் 7-2 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்றது.மேலும் திருநெல்வேலி விளையாட்டு விடுதி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
முன்னதாக நடைபெற்ற மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் சிவகங்கை St. ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணி 3-2 என்று கோல் கணக்கில் கன்னியாகுமரி கார்மல் மேல்நிலைப் பள்ளி அணியை வீழ்த்தி சிவகங்கை அணிவெற்றி பெற்றது
இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம் தலைமை தாங்கினார்கள் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி போட்டியின் அமைப்பு செயலாளரும் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு துணைச் செயலாளருமான சார்லஸ் டிக்சன், நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியின் இயக்குனர் சண்முகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”