மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ்,அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்ய,மத்திய அரசு இதுவரை 320 மொபைல் ஆப்களை தடை செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,அவர் கூறியதாவது: “அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன்,2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்ட பிரிவு 69A இன் கீழ், மத்திய இதுவரை 320 மொபைல் பயன்பாடுகளை முடக்கியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 மொபைல் ஆப்களுக்கு மீண்டும் தடை செய்யப்பட்டன என்றும் கூறியுள்ளார்.