தமிழ்நாட்டில் நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று(மார்ச்.24) நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 5 சவரனுக்கு உட்பட்ட பொது நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் பெரியசாமி விளக்கமளித்தார்.
இது குறித்து பேசிய அவர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ரூ.1000 கோடி விடுக்கப்பட்டது. இதுவரை 5,48,000 கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு 31-ஆம் தேதிக்குள் தள்ளுபடி ரசீது தர திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், 28ம் தேதிக்குளேயே ரசீது தரப்படும் என நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.