வாலிபரின் மிரட்டலால் உயிரை மாய்த்த பெண்.. சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்..!
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மடுகுலப்பள்ளி மண்டலம் சிந்தலகுடத்தை சேர்ந்த கோட்டா ராமலிங்கம், ராஜிதலா தம்பதியின் மகள் கோட்டா கல்யாணி (19) .
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபோயினமது ஆகிய இருவரும் ஒருதலை காதல் என்ற பெயரில் கல்யாணியை தொடர்ந்து சில காலமாக துன்புறுத்தி வந்துள்ளனர்.
தங்கள் இருவரில் யாரையாவது காதலிக்கவில்லை என்றால் கல்யாணி புகைப்படங்களை இணைத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அந்த இளம் பெண் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இந்தநிலையில் சம்பவ நாளில் கல்யாணி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
பின்னர் தன்னுடைய பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து தன் மகளை மீட்குமாறு கூறினர். இதைத்தொடர்ந்து
அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்த நிலையில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
-பவானி கார்த்திக்