ஓசூரில் தெருவில் நடந்து சென்ற சிறுமியை நாய்கள் சுற்றி வளைத்துக் கடித்து குதறிய சம்பவம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வாசவி நகரில் கார்த்திக் என்பவரின் மகள் தேஜாஸ்ரீ இவருக்கு வயது 5. இவர் சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருந்த 3 நாய்கள் சிறுமியைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறின. பின்னர் காயமடைந்த குழந்தையை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிறுமியை நாய்கள் சுற்றி வளைத்து கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.