49 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல்..! கையும் களவுமாக சிக்கிய கும்பல்..!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்ன வரிக்கம் பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இந்த தோல் தொழிற்சாலையில் கே எம் நகர் பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் (35), துத்திபட்டு கலைஞர் நகரை பகுதியை சேர்ந்த முகமது லியாகத் (30) ஆகியோர் பிளானிங் டிசைனர் செக்க்ஷனில் பணிபுரிகின்றனர்.
கடந்த 2022 முதல் 2024 வரை தோல் மற்றும் அதற்கான மூலப் பொருட்களை வாங்குவதில் 49 லட்சம் கையாடல் நடந்துள்ளதாக தொழிற்சாலையில் நடந்த ஆடிட்டிங் கில் தெரியவந்தது.
அதனை அடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் யாஸ்மின், முகமது லியாகத், ஜலால்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக் (50) சின்ன வரிக்கம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (33), ஆம்பூர் வளேல்காரர் வீதியைச் சேர்ந்த நியாஸ் அஹமத் (32), வெங்கடசமுத்திரம் சர்ச் தெருவை சார்ந்த அம்பேத்கர் (55) பெத்தலகேம் பகுதியைச் சேர்ந்த முகமது அலி(29) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..