டூவீலரை குறிவைத்து திருடிய கும்பல்..!! 25 பைக்கள் பறிமுதல்..!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் திருடுபோன 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ஆறு பேர் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் குடியாத்தம் நகர காவல் துறையினர் வாகன தணிக்கையில் போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரை நிறுத்தி விசாரணை செய்தபோது முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குடியாத்தம் பகுதியில் திருடு போகும் இருசக்கர வாகனங்களை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தீனா, விக்னேஷ், அம்ஜத், மற்றும் வசீகரன் ஆகிய நான்கு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் விக்னேஷ் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த விக்கி என்கின்ற விக்னேஷ் மற்றும் மாதனூர் பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆறு பேரிடமிருந்து 25 இருசக்கர வாகனங்கள் குடியாத்தம் நகர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக இந்த இரண்டு பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரே சமயத்தில் குடியாத்தம் பகுதியில் திருடு போன 25 இருசக்கர வாகனங்களும் ஆறு பேரும் கைது செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..