முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை.. ராக்கெட் தாக்குதல்.. மணிப்பூரில் என்ன நடக்குது?
கடந்த 2023-ஆம் ஆண்டு, மே மாதம் அன்று, மணிப்பூரில், மெய்தி – குக்கி ஆகிய இரண்டு இனக்குழுக்களுக்கு இடையே, மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட இந்த கலவரத்தில், பல்வேறு குடும்பத்தினரின் வீடுகள் கொழுத்தப்பட்டது.
மேலும், பல்வேறு பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். குறிப்பாக, இரண்டு இளம்பெண்கள், நிர்வாணமாக்கப்பட்டு, சாலையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, நாடு முழுவது ம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தின் காரணமாக, ஓராண்டுகளுக்கு மேலாக, அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூரில் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு இடங்களில் நவீன ஆயுதங்களை கொண்டு அங்கு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.
ராக்கெட் குண்டு வீச்சு நடந்த இடத்திற்கு அருகில்தான் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. குக்கி இனத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் அதி நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் படையினருக்கும் சவாலை கொடுத்துள்ளது.