வெள்ள பாதிப்பு மக்களுக்கு மாணவர்களே உணவு தயார் செய்து அனுப்புகிறார்கள்..
தூத்துகுடி மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு சட்டக்கல்லூரி சார்பில் 10 இலட்சம் மதிப்பீட்டில் கல்லூரி மாணவ, மாணவிகளே உணவு தயார் செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மாவட்ட நிர்வாகம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தூத்துகுடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கும் வகையில் ஈரோடு சட்டக்கல்லூரி சார்பில் 10 இலட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகள் உணவு தயார் செய்து வாகனங்கள் மூலம் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
கோபிசெட்டிபாளையத்தில் திமுக நெசவாளர் அணியின் தலைவர் சிந்து ரவிசந்திரன் தலைமையில் ஈரோடு சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள், முதல்வர், தாளாளர் என 200க்கும் மேற்பட்டோர் உணவு தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.