“பறக்கப் போகும் கொடி.. ஓங்கி ஒலிக்கப் போகும் பாடல்..!! தயாரான தமிழக வெற்றிக் கழகம்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகாரக வலம் வருபவர் நடிகர் விஜய். 50க்கும் மேற்ப்பட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்த விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் சினிமாவில் இன்னும் இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி முழுநேரமும் அரசியலில் ஈடுப்பட உள்ளதாக அறிவித்தார்.
இவரது இந்த அறிவிப்பு ஒரு புறம் இவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு புறம் அவர் அரசியலில் வரபோகிறார் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்தநிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிகழகத்தின் கொடி ஏற்ற விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில் ”நாளை காலை 9:15 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் கட்சியின் கொடியும், கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன் என்றும் நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்.தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்விற்காக, பனையூர் கட்சி அலுவலகத்தில் 500 நாற்காலிகள் போடப்பட்டு, பிரம்மாண்ட LED திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தள்ளுமுள்ளு ஏற்படுவதை தடுப்பதற்காக துபாயில் இருந்து 20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடல்கள் கவிஞர் விவேக் வரியில், இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்