பயிற்சியில் இருந்த பெண் மருத்துவர்… ஆபசமாக சைகை காட்டிய நபர்..!
கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அப்போது வடமாநில நபர் ஒருவர் அந்த பெண் பயிற்சி மருத்துவரிடன் தனது ஆடையை விலக்கி ஆபசமாக சைகை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் இதுகுறித்து தன்னுடன் பணிபுரியும் சக மருத்துவர்களிடம் சொல்லமுற்படும் போது அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து பயிற்சி மருத்துவர் போலீசாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் அந்த தேடி வந்தனர். பின்னர் அங்கு சுற்றி திரிந்த அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மயங்க் டல்லார் (25) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.
ஏற்கனவே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவரை பாலியல் பலத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோவையில் மீண்டும் பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”