பீடி தரமறுத்த தந்தை… தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகன்…! விசாரணையில் வந்த அதிர்ச்சி தகவல்…!
சென்னை அம்பத்தூர் எம்.கே.பி நகரை சேர்ந்தவர் மகேந்திரன். 55 வயதாகும் இவருக்கு அருண் என்ற மகன் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவதன்று அருண் தந்தையிடம் பீடி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரன் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த அருண் வீட்டின் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டுள்ளார்.
இதனால் இரத்த வெள்ளத்தில் மகேந்திரன் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த தகவலை அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அருணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண் சற்று மனநல பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
-பவானிகார்த்திக்