பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தந்தை..! போக்ஸோ வழக்கில் கைது..!! திருப்பூரில் நடந்த கொடூரம்..!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த மலையாண்டி சாமி என்பவர் கடந்த மூன்று மாதங்களாக சொந்த மகளையே பாலியல் வன் கொடுமை செய்து வந்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்து விட்டு வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
சில நாட்களாக மகள் பிச்சம்மாள் (பெயர் மாற்றம்) உடல் நல குறைவால் அவதிப்பட்டுள்ளார், பின் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் கர்பம் என தெரியவந்தது, இது குறித்து காரணம் விசாரித்த போது பிச்சம்மாள் தந்தை காரணம் என கூறி அழுதுள்ளார்.
பின் மலையாண்டி சாமியை, உடுமலை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பின்வரும் தீர்ப்பினை வழங்கியுள்ளார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 10 வருடசிறை தண்டனை, 7500 ரூபாய்அபராதமும், அபராத தொகையினை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.
குற்றவாளிக்கு குறுகிய காலத்தில் தண்டனை பெற்றுத்தர சிறப்பாக பணியாற்றிய உடுமலை அனைத்து மகளிர் காவல் துறையினரை சமூகஆர்வலர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.