பிரசாந்த்தை போலீசிஸ்.. சிக்க வைத்த அந்த பிரபல நடிகை..?
90களின் காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த். புகழின் உச்சியில் இருந்த இவர் பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது விஜயின் கோட் திரைப்படத்தின் மூலம் ரீ என்ரி கொடுத்த இவர் அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ஊர்வசி என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ரிலிஸ்க்கு தயாரான இப்படம் வரும் 9 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தநிலையில் படத்தை புரோமோட் செய்யும் பணியில் தற்போது நடிகர் பிரசாந்த் மற்றும் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பேட்டியளித்தனர்.
அப்போது பிரசாந்த் பேட்டியின் ஒருபகுதியாக பெண் தொகுப்பாளினியுடன் தி நகரில் பைக்கில் ரைட் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. போக்குவரத்து விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரியா ஆனந்துடன் நடத்தபட்ட பேட்டியில் Truth or dare போட்டி வைக்கப்பட்டதாகவும் அந்த போட்டியில் பிரியா ஆனந்த், பிரசாந்துக்கு ‛டேர்’ கொடுத்ததை தொடர்ந்து தான் நடிகர் பிரசாந்த், தொகுப்பாளினியுடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்று அபராதம் செலுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
-பவானி கார்த்திக்