திருமணம் ஆன புது மாப்பிளையை கடத்திய முன்னாள் காதலி..! போலீசில் சிக்கியது எப்படி..?
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற மென் பொறியாளர் இளைஞருக்கும் பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூலை 5ம் தேதி திருமணம் நடந்துள்ளது. நேற்று வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டிற்கு வெளியே வந்த பொழுது அங்கு வந்த மர்ம கும்பல் 4 பேர் பார்த்திபனை காரில் ஏற்றியுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ந்த பார்த்திபனின் தாயார் ஆயிஷா காரை நிறுத்த முயன்றுள்ளார்.., ஆனால் அவரின் மீது காரை ஏற்றி விட்டு கார் நிற்காமல் சென்றுள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அவரை காப்பற்றி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும் இந்த இரு சம்பவம் குறித்தும் பார்த்திபனின் மனைவி பிரியா வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்.., அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து.., கார் எண் மற்றும் பார்த்திபனின் மொபைல் எண்ணை வைத்து ட்ராக் செய்துள்ளனர்.
அப்பொழுது காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் பார்த்திபனை அடைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.., அங்கு சென்ற போலீசார் ஒரு இளம்பெண் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். அந்த கைது கும்பலிடம் விசாரணை மேற்கொண்ட போதே பல உண்மைகள் தெரியவந்தது.
பார்த்திபன் பிரியாவை திருமணம் செய்வதற்கு முன் சவுந்தர்யா என்ற பெண்ணை 7 வருடமாக காதலித்துள்ளார்.., இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கு தெரிய வர ஜாதியால் புரிந்துள்ளனர்.
காதலில் பிரிந்த இருவரில் பார்த்திபன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார், ஆனால் சவுந்தர்யா பார்த்திபனை நினைத்து வருந்தியுள்ளார்.., பார்த்திபனுக்கு திருமணம் என தெரிந்துக்கொண்ட சவுந்தர்யா.., தாய் உமா, தாய்மாமன் ரமேஷ் மற்றும் துணை ராணுவ வீரர் ஜெயவேல் மற்றும் சித்தப்பா சிவகுமார் ஆகிய 4 பேரும் பார்த்திபனை மிரட்டி கட்டாய திருமணம் செய்ய தூண்டியுள்ளனர்.
சரியான சமையத்திற்கு சென்ற போலீசார்.., திருமணத்தை தடுத்து நிறுத்தி 5 பேர் மீதும், கடத்தல் பிரிவு, விபத்து மற்றும் கட்டாய திருமணம் போன்ற அனைத்து வழக்குகள் குறித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.