செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்து வந்த அமலாக்கத்துறை தற்போது 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வந்துள்ளதாகவும் , மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரரை தேடி வருவதாகவும் அமலாக்கத்துறை போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் தீவிர விசாரணையில் நிர்மலா ,லட்சுமி ,ஆகியோர்களை விசாரிக்க உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரியவந்துள்ளது. மேலும் 5 நாள் காவல் முடிந்ததை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில். 5 நாள் காவல் முடிவடையும் நிலையில் மேலும் 5 நாட்கள் கஸ்டடி கேட்டு அமலாக்கத்துறை மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீட்டிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர். மேலும் தற்போது செந்தில் பாலாஜியை புழல் சிறையில் அடைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர்
Discussion about this post