பால் பாக்கெட் கேட்ட மனைவி.. ஆத்திரம் அடைந்த கணவர்.. இறுதியில் அறங்கேறிய சம்பவம்..!
திருச்சி மாவட்டம் இடையாத்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (39) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த நர்மதா(31) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு குரு பிரசாத் (8) மற்றும் கிருத்திகா(6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக நர்மதா தனது குழந்தையுடன் தனியார் மில் குடியிருப்பில் வாழ்ந்து வந்ததோடு, அதே மில்லில் வேலை பணியாற்றியும் வந்தார்.
சிவகுமார் அவ்வப்போது வீட்டிற்கு சென்று தனது குழந்தைகளை பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அன்று குழந்தைகளை பார்க்க சென்ற சிவகுமார் மறுநாள் தனது மகனின் பிறந்தநாள் என்பதால் அங்கேயே தங்கியுள்ளார்.
இதனைதொடர்ந்து சிறுவனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய பின் சிவக்குமார் நேற்று காலை அவசர அவசரமாக வீட்டிலிருந்து வெளியே சென்றார்.
இதனை அடுத்து குழந்தைகள் தொடர்ந்து, அழது கொண்டிருந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது நர்மதா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் மனைவியை கொலை செய்தாக கூறி சிவகுமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியானது. அதாவது மகனின் பிறந்தநாளை கொண்டாட சென்ற சிவகுமார் நர்மாதாவிடம் இருவரும் சேர்ந்து வாழ அழைத்துள்ளார்.
இதனை பெரிதாக கண்டுக்கொள்ளாத நர்மதா பக்கத்து வீட்டு குழந்தை அழுகிறது அதனால் வீட்டில் உள்ள பால் பாக்கெட்டை எடுத்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் அடுத்த வீட்டு குழந்தைக்கு நான் ஏன் வேலை செய்ய வேண்டும் என்று கோபத்துடன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, நர்மதா ”அப்படி என்றால் நீ வீட்டில் இருக்க வேண்டாம் வீட்டை விட்டு வெளியே போ” என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றதால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நர்மதாவை சரமாரியாக குத்தி கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் கூறியுள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்.
-பவானி கார்த்திக்