2022-23ம் நிதியாண்டில் தேர்தலுக்காக மட்டும் பாஜக 1092 கோடி செலவிட்டுள்ளதாக தகவல்
2022-23ம் நிதியாண்டில் தேர்தலுக்காக மட்டும் பாஜக 1092 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பாஜக தாக்கல் செய்துள்ள வரவு செலவு கணக்கில், தேர்தல் விளம்பரங்களுக்காக மட்டுமே பாஜக ஒரே ஆண்டில் சுமார் 432 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பயணங்களுக்காக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் வாடகைக்கு மட்டும் ஒரு ஆண்டில் 78 கோடி செலவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022-23ம் நிதியாண்டில் பாஜகவுக்கு வங்கிகளில் இருந்து வட்டியாக மட்டும் 237 கோடி கிடைத்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மட்டும் ஒரே ஆண்டில் 75 கோடியை பாஜக கொடுத்துள்ளதாகவும், பாஜக கட்சியின் வருமானம் 2,364 கோடி என தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய செய்தித் தாள்கள் விற்றதன் மூலம் பாஜகவுக்கு சுமார் 16 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2022 – 23 காங்கிரஸ் கட்சிக்கு 452 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.