செல்வம் செழிக்க மகாலட்சுமி வழிபாடு..!!
ஸ்ரீதேவி எனும் மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு வெளியே வந்து, மற்ற தேவியவரை விட தானே சிறந்தவள் என்பதை நிரூபிப்பதற்காக தங்காலமலை என்ற திருத்தலதிற்கு வந்து தவமி இருந்தவர்.
மஹாலக்ஷ்மிக்கு பல திருத்தலங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட முக்கிய திருத்தலங்களை பார்க்கலாம்.
சென்னை மயிலாப்பூர் :
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தனி சந்நதியில் மயூரவல்லித் தாயார் கோயில் கொண்டுள்ளார். இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமிக்கு வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் மகாலட்சுமியின் பூரண அருள் கிடைக்கும்.
மயூரவல்லித்தாயார் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி கீழிரு கரங்கள் அபய மற்றும் வரத ஹஸ்தம் காட்டி அருள் பாலிக்கிறார். வெள்ளிக்கிழமை அன்று மயூரவல்லித்தாயார் சந்நிதிக்கு வந்து சந்நதியின் கதவில் மணிக்கட்டி பிரார்த்தனை செய்து கொண்டு, வில்வார்ச்சனை செய்து வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும்.
வீட்டில் மஹாலக்ஷ்மி புகை படத்திற்கு தாமரை பூக்களால் அலங்கரித்து நெய் தீபம் ஏற்றி, நைவேத்தியம் படைத்து வழிப்பட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post