அரசு கல்லூரி மாணவர்களை ஏற்றி சென்ற கார் கவிழ்ந்து விபத்து…
கோபிசெட்டிபாளையம் அருகே அரசு கல்லூரி மாணவர்களை ஏற்றி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள திட்டமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 7 பேர் கல்லூரி முடித்துவிட்டு, ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில், கார் திட்டமலை முருகன் கோவில் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 15அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் கார் ஓட்டுனர் ரங்கசாமி சம்பவத்தில் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த 7 கல்லூரி மாணவர்களும் காயமடைந்த நிலையில், கோபி அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.