உத்தரகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி
உத்தரகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளா்களும் 17 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலா 1 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறித்த அவர், ஒவ்வொரு தொழிலாளார்களுக்கும் தலா 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
அதேபோல், மீட்புப் பணியில் ஈடுபட்ட எலிவளை முறை சுரங்கப் பணியாளா்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல் மற்றும் மன நலன் தொடர்பாக பரிசோதனைகள் நிறைவடைந்ததையடுத்து 41 தொழிலாளர்களும் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
