பிஸ்கட் போட்ட சிறுவனை கடித்து குதறிய நாய்..!
சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் சென்னை போன்ற பல இடங்களில் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்தவகையில் சென்னை மயிலாபூர் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவரின் ஆறு வயது மகன் நேற்று இரவு வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த போது அங்கிருந்த தெரு நாய்களுக்கு பிஸ்கட்டுகளை வழங்கியுள்ளார்.
அப்போது திடீரென அந்த தெரு நாய் சிறுவன் மீது பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், சிறுவனை மீட்டு . எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மேலும் சிறுவனின் முகம், தோள்பட்டையில் தெருநாய் கடித்துள்ளதால் சிறுவன் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றன.
-பவானி கார்த்திக்