வீட்டில் தனியாக இருந்த மருத்துவர்… திடீர் தற்கொலையால் உறைந்து போன குடும்பத்தினர்..!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தலூரை சேர்ந்த தம்பதியினர் கணேஷ்- ராஜகுமாரி(55). இவர்களது மகள் அப்சாரா(28), செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் அப்சாரா தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் அப்சாராவின் தந்தை மற்றும் தாய் இருவரும் தனது வேலை விஷயமாக சொந்த ஊருக்கு சென்றனர். இதனை தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த மகளின் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் அப்சாரா எடுக்காததால் பக்கத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்பு கொண்டு தனது மகளிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி, பக்கத்து வீட்டுக்காரர் அப்சாராவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தால் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்சாரா கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் உடனே செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்
அப்போது, அப்சாரா தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார். இதையடுத்து, அப்சாராவின் விடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்