பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி… தேர்வு ஆகாத விரக்தியில் இளைஞர் எடுத்த முடிவு…!
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவறிந்த பரங்கிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் தற்கொலை செய்யபட்ட வாலிபர் யார் என்பதை குறித்தும், தற்கொலைக்கான காரணம் குறித்தும் வழக்கு பதிவு செய்து திவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சாமுவேல் ராஜ் (24) என்பதும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாட தேர்வு ஆகாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
-பவானி கார்த்திக்