தொடர் மழையால் குளம் போல் காட்சி அளிக்கும் மாவட்டம்..!! பரிதவிக்கும் மக்கள்..!!
கரூர் வெண்ணைமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் இடத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருப்பதாக கூறி அறநிலையத்துறை நீதிமன்றம் மூலம் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்டோர்களை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும், கைதாக மறுத்த ஒரு சிலரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கட்டையன் குடிகாடு கிராமத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது வேகத்தை குறைத்து செல்ல வேண்டும் எனவும் இந்த பகுதிகளில் வன விலங்குகள் அதிகம் வாழும் பகுதிகள் என்பதால் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூர் என்ற இடத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்போகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே பகுதியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வரவுள்ள நிலையில் அதற்க்கு அருகிலேயே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்தும் கொலையாளிகள் யார் என்பது குறித்தும் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
திருப்பத்தூர் உடையராஜாபாளையத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான லாரியில் 13 டன் ரேஷன் அரிசியை அதன் ஓட்டுநர் பிரதீப்குமார் என்பவர் கொண்டு சென்ற போது ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் மேற்படி லாரி ஓட்டுநரை கைது செய்து வாணியம்பாடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வேலூர் அடுத்த தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. என்றும் இதனால் மக்கள் சாலையில் நடக்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். மேலும் குப்பைகளும் அள்ளப்படாததால் துர் நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அமைத்து கால்வாய்களை கட்டி தர வேண்டுமென மாநகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் இல்லாமல் துரிதமாக செயல்பட்டு சாலையை அமைத்து கால்வாய்களையும் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..